நீர்க்கம்பிகளைத் தயாரிக்கும் வேகம் கூடி திசைமானியின் திருகல்களை குத்தகைக்கு எடுத்து பொழியத் துவங்கியிருக்கிறது வானம் ...
எச்சரிக்கைக் கூண்டுகளின் எண்கள் கூடக்கூட பரபரப்பாகிறது நகரம் ...
சில்லென்ற காற்றைத் தடை போட்டு முழுக்கச் சாத்தப்பட்ட ஜன்னல் கம்பிகளில் பிஞ்சுக்கைகள் .....
அடுத்த நாளில் தானே "தானே " கரைகடக்கும் என்று சேர்த்துவைத்த அழுக்கு ஆடைகள்.....
துளிகள் சொட்ட சொட்ட விரிந்து பரவும் குடைப்பூக்கள் .....
எரியாத தெரு விளக்குகளின் கீழே பொன் சங்கிலி மூடி அவசர நடையிடும் பெண்டிர்......
மார்கழியின் கோலங்களுக்கு தாற்காலிகத் தடை .....
"தானே" செல்லும் வரை தானே இவ்வளவும்....
No comments:
Post a Comment