எழுத்துக்களை சொற்கள் ஆக்கும் வித்தை இன்னும் பிடிபடாததால் அசைந்து கொண்டே இருக்கிறது என் எழுத்துத் தராசு....
இந்தப்பக்கம் இதயம் என்றால் அந்தப்பக்கம் காதல் என்று பிதற்றுகிறது ...
இந்தப்பக்கம் இமை என்றால் அந்தப்பக்கம் கண் என்று உளறுகிறது
அகராதி புரட்டினாலும் அதீதமாய் கிடைப்பதில்லை அன்றாட அருஞ்சொற்கள்
சாதாரண வார்த்தைகளை தேர்வு செய்தால் தேர்வில் கூட மதிப்பெண் கிடைப்பதில்லை ...
தெரிந்த வார்த்தைகளை தெரிவு செய்தால் சிறு குழந்தையும் சட்டை செய்வதில்லை ...
வசியம் செய்ய மை இருந்தால் போதும் போலிருக்கிறது ... மக்களை கவனிக்க வைக்க வாய் "மை " தேவைப்படுகிறதே..
எனவே மீண்டும் மீண்டு அர்த்தங்களுடன் கூடிய அருஞ்சொற்கள் தேடும் பணிக்கு .....
வாழ்த்துக்கள் .... மீண்டும் ஒரு நன்னாளுக்கு ....
kavitha vin kavithaigal.
ReplyDelete